viernes, 17 de febrero de 2012

இந்திய இசையின் புதிய பரிமாணம் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்

                    வீட்டின் ஒரே ஆண் பிள்ளை ஏ.ஆர் ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். தாய் தந்தையர் ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சூட்டிய பெயர் திலீப் குமார் என்பதாகும். இஸ்லாத்தைத் தழுவிய பின்னரே ஏ. ஆர். ரஹ்மான் என அழைக்கப்பட்டார்.  இவருடைய 11 வது வயதில் தந்தை ஆர்.கே சேகர் இறந்து போக மொத்த குடும்பத்தையும் வறுமை ஆட்கொண்டது. அப்படிப்பட்ட வீட்டு பிரச்சினையிலும் ரஹ்மானுக்கு இசையின் மேல் இருந்த ஆர்வத்திலும் அவரது விடா முயற்சியிலும் பல முன்னணி இசை அமைப்பாளர்களிடமும் இசை பயின்று இன்று உலக அளவில் மிக முக்கிய இசை அமைப்பாளராகத் திகழ்கின்றார்.
                     இந்திய இசை அமைப்பாளர்களை டிஜிட்டல்  இசை நோக்கி பயணிக்க வைத்தார். உலக இசையை இந்தியாவிற்கு கொண்டு வந்த பெருமையும், இந்திய இசையை உலகுக்கு கொண்டு சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இந்திய சினிமாவை இவர் பின்னால் வர செய்தார். இந்திய சினிமாவும் இந்திய ரசிகர்களும் எங்களுக்கும் கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ஆஸ்கர் விருதுகள் 2 ஐ எடுத்து இந்திய இசை வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.  
                       இவர் ஆஸ்கர் விருது பெற்றதை  ஒடுமொத்த இந்தியர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவர் ஆஸ்கர் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் பேசியதால் அவரது வெற்றியை  உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் கொடாடினார்கள். அந்த தமிழ் பேச்சினால் அவரது இனப்பற்றையும் மொழிப்பற்றையும் தமிழினம் நன்கு அறிந்து கொண்டது.
                        ரஹ்மானின் இசை எல்லோயும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அவரது ஒலி நுட்பங்கள் உள்ளுக்குள் ஏதேதோ உணரச் செய்கின்றது இளசுகளின் மனங்களை துள்ள செய்கின்றது. இசை மட்டும் இல்லை அவரது வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அடக்கம், பணிவு, புதுமை, தேடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.    
                        ரஹ்மானின் ரசிகன் என்ற வகையில் அவருடைய ஆரம்ப வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இணைய தளங்களில் தேடிய போது N.சொக்கன் எழுதி வெளி வந்திக்கும் "ஏ.ஆர் ரஹ்மான்" என்ற புத்தகத்தில் அவரைப்பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆர்.கே சேகரின்  இசை வாழ்கையில் தொடக்கி அஸ்கர் வரையான ரஹ்மானின் இசைப்பயணத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. 14  அத்தியாயங்களை கொண்ட இந்த புத்தகத்தில் ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசை அமைத்தது பற்றி சொல்லி இருப்பது 7 வது அத்தியாயத்தில் தான். அதனால் கிட்டத்தட்ட பாதி புத்தகம் ரஹ்மானின் சினிமாவிற்கு முந்திய வாழ்வைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. 
                        
                                   புத்தகத்தில் இருந்து சில முக்கிய தகவல்கள்.

                      ரஹ்மானின் முதல் திரைப்பட பாடல் எது? ரோஜா பட பாடல் சின்ன சின்ன ஆசையா? இல்லை 1975 ல் வெளிவந்த "பென்படா" என்ற மலையாளப் படத்தில் வர "வெள்ளித்தேன் கிண்ணம் போல்" என்ற பாடல். இந்த படத்திற்கு இசை அவரது தந்தை ஆர்.கே சேகர். பாடல் ஒலிப்பதிவின் போது 9 வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் எதோ வாசித்து காட்ட அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்து விட அந்த மெட்டே பாடலாகியது. தந்தை இறந்த பிறகு இஸ்டுடியோ இஸ்டுடியோவாக அலைந்த அவரால் நன்றாகப் படிக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் திலீப் கிட்டத்தட்ட எல்லா இசை அமைப்பாளர்களிடமும் இசை அமைத்திருக்கின்றார். எம். எஸ் விஸ்வநாதனிடம் தொடங்கி டி.ராஜேந்தர்,ராஜ்கோட்டி என்று இளைஜராஜா வரை இவர் வேலை பார்த்திருக்கின்றார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டு இன்று தனித் திறமையுடன் மிளிர்கின்றார்.
                            ரஹ்மான் இசையை தவிர கார் ஓட்டவும்  கற்றுக்கொண்டார். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்.
                            ரஹ்மான் விளம்பரத்துறையில் இருந்த போது, அவரின் இசை இந்தியாவெங்கும் கொடிக்கட்டி பறந்தது. உதாரணத்திற்கு, டைட்டன் விளம்பரத்தில் வரும் கீ-போர்டு இசை, அரவிந்த்சாமி வரும் லியோ காபியின் வீணை இசை, ஏசியன் பெயிண்ட்ஸ் பொங்கல் விளம்பரம், சிந்தால் சோப், பிரிமியர் குக்கர், கார்டன் சாரிஸ் விளம்பரங்களின் இசை இவையெல்லாம் அந்நேரத்தில் ரஹ்மான் பற்றி அறியாமலே, எல்லோரையும் கவர்ந்திருந்த விளம்பரங்கள். அந்த இசை துணுக்குகளை இப்போது கேட்டாலும் சொல்வோம், என்ன விளம்பரம் என்று.
எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார். சந்திப்புக்கள் சந்தர்ப்பமாக மாற  ரோஜாவிற்கு இசை அமைக்க ஒப்பந்தமானார் ரஹ்மான்.
இப்படி நிறைய சுவாரஸ்ய தகவல்களை இந்த புத்தகத்தில் ஆசிரியர் தொகுத்தளித்திருக்கிறார்.
                            அவர் தேடி தேடி கற்றுக்கொண்ட பலவகை இசை வடிவங்கள், அவருடன் இணைந்த தமிழின், இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள், அவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் பற்றிய தகவல்கள் - ரஹ்மானின் திறமையை, பெருமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தமிழ் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஆஸ்கரை நெருங்கியது எப்படி என்பதை தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, இந்திய ஆல்பம், லண்டன் மேடை நாடகம், ஆங்கில சினிமா என்று சென்ற அவரின் இசைப்பயணத்தை வாசித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். அவரது இசைப்பயணம் தொடர எம் வாழ்த்துக்கள்.
    
                        ஏ.ஆர் ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-
* Grammy விருது- 2 முறை
* MTV Asia விருது- 2 முறை
* MTV வீடியோ இசை விருது- 1 முறை
* Academy விருது- 2 முறை 
* BAFTA விருது- 1 முறை* Golden Globe விருது- 1 முறை
* Satellite விருது- 1 முறை
* World Soundtrack விருது- 1 முறை
* தேசிய திரைப்பட விருது- 4 முறை
* Filmfare விருது- 14 முறை
* Filmfare(தெற்கு) விருது- 12 முறை
* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை
* விஜய் விருது- 1 முறை
* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.
த.ஸ்ரீதர்(ஸ்பெயின்) 
நன்றி

No hay comentarios:

Publicar un comentario